Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூலை 17 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீமத் போகர் பழநி ஆதீனம் புலிப்பாணி சித்தரின் கருவழி வாரிசு தூர்க்கா பீடாதிபதி சீர்வளர் சீர் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் கதிர்காம கந்தன் திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற விஷேட பூஜைவழிபாடுகளில் கலந்து கொண்டார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் பழநி ஆதீனத்தில் இலங்கை மக்களுக்கு தெய்வ ஆசி வேண்டி விஷேடயாகபூஜைகள் நடாத்திய சுவாமிகள் ஏற்கனவே பலதடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர், ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலயத்திருத்தலம்,கொட்டாஞ்சேனை சாய் சரணாலயம்,தெமட்டகொட செந்தில் குமரன் திருத்தலம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்து,விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டு அடியார்களுக்கு ஆசி வழங்கியவர்.
17ம் திகதி திங்கட்கிழமை நுவரெலியா சீதையம்மன் ஆலயம்,றம்பொடை ஆஞ்சநேயர் ஆலயம்,மாத்தளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில் ஆகியவற்றிற்கு விஜயம் செய்து,விஷேடபூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதோடு அடியார்களுக்கு ஆசி வழங்குவார்.
தொடர்ந்து 18 முதல் 20 வரை திருகோணமலை தட்சண கைலாய ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில்,யாழ்ப்பாணத்திற்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கும்,மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கும் விஜயம் செய்து விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்கிறார். கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் 36வது ஆடிப்பூர மகோற்சவத்திலும் கலந்து சிறப்பித்து அடியார்களுக்கு ஆசி வழங்குவார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago