2021 ஜூன் 24, வியாழக்கிழமை

இந்தியா வருகிறார் ட்ரம்ப்

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் பெப்ரவரி மாத இறுதியில் இந்தியா வரள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க – சீன வர்த்தகப் போரை தொடர்ந்து இந்தியா மீதும் ட்ரம்ப் பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்னர்,

இந்தியாவுக்கு  வழங்கி வந்த ஜிஎஸ்பி வர்த்தக சலுகையை அமெரிக்கா ரத்து செய்தது. இதனை மீண்டும் வழங்க வேண்டும் என இந்தியா கோரி வருகிறது.

இந்தநிலையில் பிரதமர் மோடி அண்மையில் ஜனாதிபதி  ட்ரம்ப்பைத் தொடர்பு கொண்டு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை , அவர் ஏற்றுக்

கொண்டதாக கூறப்படு கிறது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி  தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன் இந்தியா வர ட்ரம்ப் ஆர்வமாக உள்ளார்.

ஜனாதிபதி  தேர்தலில் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் முக்கியத்துவம்  வாய்ந்தவை என்பதால் அரசியல் ரீதியாகவும் ட்ரம்ப் இந்த விடயத்தில் ஆர்வம்

காட்டி வருகிறார். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்தியா வருவதற்கான பணிகளை அமெரிக்க அதிகாரிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .