2025 மே 08, வியாழக்கிழமை

அசாம் வெள்ளத்தில் ; 1.61 இலட்சம் பேர் பாதிப்பு

Freelancer   / 2024 ஜூன் 19 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சுமார் 1.61 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 28ஆம் தேதி முதல் அந்த மாநிலத்தில் பதிவான மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் செவ்வாய்க்கிழமை அன்று ஹேலகண்டி மாவட்டத்தில் ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் வெள்ளத்தால் 41,711 குழந்தைகள் உட்பட சுமார் 1.52 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 225 கிராமங்கள் வெள்ள பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன. அங்கு மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22,464 பேர் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கோபிலி ஆற்றில் வெள்ளம் காரணமாக நீர் அபாய கட்டத்தை தாண்டி பாய்ந்து கொண்டிருப்பதாகவும் தகவல்.

மாநிலத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 470 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 1378 ஹெக்டர் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 93,835 வீட்டு விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, கடந்த வாரம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வெள்ளத்தால் வனவிலங்குகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். காசிரங்காவில் மூன்று புதிய கமாண்டோ பட்டாலியன் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X