2026 மார்ச் 07, சனிக்கிழமை

அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள் !

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 07 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெகுசராய்:

பொதுமக்களின் குறைகளை அதிகாரிகள் கேட்கவில்லையெனில் மூங்கில் தடியால் அவர்களின் தலையில் அடியுங்கள் என மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பீஹார் மாநிலம் பெகுசராயில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவது: எனது துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் பொதுமக்களின் குறைகளை கண்டுகொள்வதில்லை என எனக்கு புகார் வருகிறது. அப்போது அவர்களிடம் நான், இது போன்ற சிறிய விஷயங்களுக்கு எல்லாம் பிடிஓ, எஸ்டிஎம், கலெக்டர், கிராம பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மக்கள் பணி செய்யக் கடமைப்பட்டி ருக்கிறார்கள்.

ஒருவேளை அவர்கள் உங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் மூங்கில் தடியால் அவர்களின் தலையில் அடியுங்கள். அப்போதும் அவர்கள் அந்தப் பணியைச் செய்யாவிட்டால் பிரச்சினையை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் என் பலத்தைக் காட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .