2025 மே 08, வியாழக்கிழமை

அதிக வெப்பத்தால் திணறும் வட மாநிலங்கள்

Freelancer   / 2024 ஜூன் 18 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுடெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் நிலையில், இன்று 50 டிகிரி செல்சியஸ் (122 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையை எட்டிள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.

நாடு முழுவதும் கோடை காலம் இன்னும் முடிவடையாமல், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. புதுடெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த மாநிலங்களில் இதுவரை வெயிலின் தாக்கத்தால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், புதுடெல்லியில் இன்று 45 டிகிரி செல்சியஸ் (113 பாரன்ஹீட்) வரை வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், இன்னும் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும், நாளை, புதுடெல்லி, உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, ஹரியானா, புதுடெல்லியில் பகலில் வெயிலின் கொடுமை போக, இரவிலும் வெக்கை நீடிக்கிறது.

இந்நிலையில், ஜூன் 27க்கு பிறகு உ.பி., புதுடெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் படிப்படியாக வெப்பநிலை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X