2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அத்துமீறிய ’கொடூர’ வைத்தியர்

Freelancer   / 2023 ஜூலை 12 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பதல்பூர் அருகே வசிக்கும் 23 வயது இளம்பெண்   சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவராவார்.  இந்நிலையில், இந்த பெண் சில பொருட்களை வாங்க மருத்துவ சிகிச்சை நிலையத்துக்குச் சென்றுள்ளார்.  .

பெண் வீட்டை விட்டு சென்ற நேரமாகியும் திரும்பாததால் அவரின் தாய்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இளம்பெண்ணை அவரது தாயாரும் அக்காவும் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். அப்போது 35 வயதான வைத்தியரின் சிகிச்சை நிலையத்துக்கு வெளியே இளம்பெண்ணின் செருப்புகள் இருந்துள்ளன. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 மனநலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். உடனடியாக பெண்ணை மீட்ட குடும்பத்தார் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் மருத்துவரை பொலிஸார் கைது செய்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X