Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 04 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) விரைவில் ஆட்சி அமைக்குமனெ மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இரு தேசிய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் (03) ஆரம்பமானது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உள்ளிட்ட அக்கட்சியின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஹைதராபாத் வந்துள்ளனர்.
கூட்டத்தில் உரையாற்றி அமித் ஷா, 'நாட்டின் அடுத்த 30-40 ஆண்டுகள் பா.ஜ.க.,வின் சகாப்தமாகத் தான் இருக்கும். இந்த காலகட்டத்தில் இந்தியா விஷ்வகுருவாக உருவெடுக்கும். 2002 குஜராத் கலவர வழக்கில் அனைத்து விசாரணையும் முறையாக நடைபெற்று நீதிமன்றமே மோடியை குற்றமற்றவர் என தீர்ப்பளித்துள்ளது. பிரதமர் மோடி அரசியல் சட்டத்தை முறையாக மதித்தார் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .