A.K.M. Ramzy / 2021 மார்ச் 08 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோல்கட்டா:
''மேற்கு வங்கத்தில், எனக்கு வாக்களிக்காதவர்கள் வசிக்கும் பகுதிகளில், மின்சாரம், குடிநீர் சேவை துண்டிக்கப்படும்,'' என, தேர்தல் பிரசார மேடையில், திரிணமுல் காங்கிரஸ் அமைச்சர் தபன்தாஸ் குப்தா, வாக்காளர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தல், ஏப்ரல் 27 முதல், எட்டுக் கட்டங்களாக நடக்க உள்ளது.
ஆட்சியை தக்க வைப்பதற்காக, திரிணமுல் காங்கிரஸ், தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் கட்சியாக, பா.ஜ., உருவெடுத்துள்ளது. இரு தரப்பினரும் பிரசாரங்களை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேற்கு வங்க மாநில வேளாண் துறை அமைச்சர் தபன்தாஸ் குப்தா, கடந்த இரு தேர்தல்களில் வெற்றி பெற்ற சப்தாகிராம் தொகுதியிலேயே, மீண்டும் போட்டியிடுகிறார்.இந்நிலையில், ஹுக்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவரது
பேச்சு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.''எனக்கு வாக்குப் போடாதவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, குடிநீர் மற்றும் மின் வினியோகம் துண்டிக்கப்படும். அவற்றை, பா.ஜ.,விடம் கேட்டு, அவர்கள் பெற்று கொள்ளலாம்,'' என, அமைச்சர் தபன்தாஸ் குப்தா கூறியுள்ளார்.
தேர்தல் பிரசார மேடையில், மாநில அமைச்சர் ஒருவர், பகிரங்கமாக வாக்காளர்களை மிரட்டியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago