A.K.M. Ramzy / 2021 ஜனவரி 28 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூயார்க்:
மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் குடியரசு தின விழாவின்போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் திடீர் வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.
இந்த வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் டில்லி வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், அமைதியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "இதுபோன்ற பல நிகழ்வுகளில் நாங்கள் சொல்வது அமைதியான போராட்டங்கள், சுதந்திரமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அஹிம்சை ஆகியவற்றை மதிக்க வேண்டியது அவசியம்" என்றார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago