2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

விஜய் உடன் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

Freelancer   / 2026 மே 10 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதல்வராக த.வெ.க. தலைவர் சி. ஜோசப் விஜய் பதவியேற்கும் விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

விஜய்யுடன் 8 அமைச்சர்களும் இன்று பதவியேற்பார்கள் என த.வெ.க வட்டாரங்கள் தெரிவித்தன.

 த.வெ.க பொதுச் செயலா் என். ஆனந்த், நிா்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன், கொள்கை பரப்பு பொதுச் செயலா் கே.ஜி. அருண்ராஜ், தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், பொருளாளா் பி.வெங்கடரமணன், துணைப் பொதுச் செயலா் ஏ.ராஜ்மோகன், வி.எம்.எஸ். முஸ்தபா உள்ளிட்டோா் அமைச்சா்களாகப் பதவியேற்பாா்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .