Freelancer / 2022 ஜூன் 02 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கைலாசம் என்பவர் விவசாயி. இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு ஆறு மகள்கள் உள்ளனர். தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பிய கைலாசம், சில ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு பொதுவான இடத்தில் அரச மரக்கன்றை நட்டு, அதைப் பிள்ளைபோல் நினைத்து வளர்த்து வந்தார்.
சில நாள்களிலேயே அரச மரக்கன்றின் அருகில் வேப்ப மரக்கன்றும் தானாகவே வளர்ந்தது. அரச மரமும் வேப்ப மரமும் அருகிலேயே வளர்ந்ததால் கிராம மக்கள் அதனை தெய்வமாக வணங்கி வந்தனர். ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, குழந்தை வரம் வேண்டி ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், வைகாசி மாத வளர்பிறை முகூர்த்த நாளில், உலக நன்மைக்காகவும் தொடர் மழை பெய்ய வேண்டியும் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைக்க ஊர் மக்களால் முடிவு செய்யப்பட்டது. இததற்கு கைலாசமும் சம்மதம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டது. அதில் மணமகன் 'அரசன்' என்றும், மணமகள் 'வேம்பு நாயகி' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. சுற்றியுள்ள ஏழு கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று அழைப்பிதழ் விநியோகம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, கிராம மக்கள் அந்தப் பகுதிக்கு திரண்டு வந்தனர். அரச மரத்துக்கு பட்டு வேட்டியும், வேப்ப மரத்துக்கு சேலையும் கட்டப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டன.
இரண்டு மரங்களுக்கும் தீபாராதனையை தொடர்ந்து, மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க, கிராம மக்கள் புடைசூழ அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருமணம் நடந்தது.
கோவில் குருக்கள் வேப்ப மரத்துக்கு தாலி கட்டி திருமணத்தை நடத்தி வைத்து, விருந்தாளிகளாக வந்த கிராம மக்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
1 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
38 minute ago
1 hours ago