2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அர்ச்சனாவுக்கு மூளையில் என்ன?

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 12 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

பிரபல தொகுப்பாளினியும் பிக்பாஸ் பிரபலமுமான அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை சீக்கிரம் குணமாகிவிடும் என நடிகர் மனோபாலா ஆறுதல் கூறி தேற்றியுள்ளார்.

மூளையில் திரவ கசிவு பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அர்ச்சனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணமாகி வீடு திரும்புவீர்கள் என நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார்.

ஜி தமிழில் தொகுப்பாளினியாக கலக்கிக் கொண்டிருந்த அர்ச்சனா விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 4இல் 'வைல்டு கார்டு என்ட்ரி'யாக கலந்து கொண்டார். பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனாவுக்கு திடீரென மூளையில் திரவக் கசிவு ஏற்பட்டதால் அதற்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

மருத்துவமனையில் அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும், இன்னும் ஒரு வார காலம் மருத்துவமனையில் ஓய்வெடுத்த பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X