2026 மார்ச் 07, சனிக்கிழமை

அறிவியல் தமிழறிஞர் இராம.சுந்தரம் காலமானார்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 09 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தஞ்சாவூர்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், அனைத்திந்திய அறிவியல் தமிழ் கழகத் தலைவரும், அறிவியல் தமிழறிஞருமான இராம.சுந்தரம் (83) உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் அவரது இல்லத்தில் நேற்றுக் காலமானார்.

ராமநாதபுரம் மாவட்டம் அலவாக்கோட்டையில் 1938 ஏப்ரல் முதலாம் திகதி  பிறந்த அவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக பணியாற்றி னார். பின்னர், 1981ஆண்டு  முதல்தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும், 1987 ஆண்டு முதல் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை பேராசிரியராகவும், 1997 ஆண்டு முதல் முதுநிலை பேராசிரியராகவும் பணியாற்றி 1998அம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.இராம.சுந்தரத்தின் இறுதிச் சடங்கு இன்று (9) காலைதஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி செல்லையா நகரில் உள்ளஅவரது இல்லத்தில் நடைபெறஉள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .