2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

ஆசிரியரினால் பாலியல் துன்புறுத்தப்பட்டேன்!

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 25 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹரியானா

பிரபல ஹிந்தி சீரியல் நடிகை தேவோலீனா பட்டாச்சார்ஜி, சிறுவயதில் ஆசிரியர் தனக்கு இழைத்த பாலியல் துன்புறுத்தல் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஹரியானாவின் குருகிராமில் பிரபல பரதநாட்டிய கலைஞரும், ஹிந்தி சீரியல் நடிகையுமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, 36, தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

  சிறுவயதில் தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து அவர் கூறி இருந்தார். அப்போது அவர் கூறியதாவது:

'சிறுவயதில், நான் என் நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் ஒருவரிடம் டியூஷனுக்கு சென்றேன். ஒரு முறை என் நண்பர்கள் திடீரென டியூஷன் வருவதை நிறுத்திவிட்டனர். அதற்கான காரணத்தை அவர்கள் கூறவில்லை. எனினும், நான் மட்டும் டியூஷனுக்கு சென்று வந்தேன். அப்போது, அந்த ஆசிரியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.

வீட்டிற்கு வந்து, நான் என் அம்மாவிடம் இதுகுறித்து தெரிவித்தேன். பின் ஆசிரியர் வீட்டுக்கே நேரில் சென்று, அவரின் மனைவியிடம் புகார் அளித்தார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் என் பெற்றோரிடம் தெரிவித்தேன். எனினும், அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. அது எனக்கு இன்று வரை உறுத்தலாகவே இருக்கின்றது.

இந்த நேரத்தில் அனைத்து பெற்றோரிடம் ஒன்றை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் பிள்ளைகள் இது போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் பட்சத்தில், தயங்காமல் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர முன்வாருங்கள்.' என்று நடிகை தேவோலீனா பட்டாச்சார்ஜி தெரவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X