Editorial / 2025 ஜூன் 23 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூதன முறையில் ஆடுகளை திருட முயன்ற நபரை பொலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே இடம்பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். நீண்ட நாட்களாக ஆடு வியாபாரம் செய்து வரும் இவர், 300 செம்மறியாடுகளை வைத்து பராமரித்து வந்துள்ளார். இதனிடையே, ஆடுகளை பராமரிக்க போதிய இடமில்லை என்பதால் வேறு இடம் தேடி வந்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த நாகம்பட்டியைச் சேர்ந்த கிளி என்ற கருப்பசாமி (47), தனது புஞ்சை நிலத்தில் ஆட்டுக்கொட்டகை போட்டுக்கொள்ளுமாறு ஆறுமுகத்திடம் கூறியுள்ளார். இருவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படும் நிலையில், தெரிந்த நபர் தானே என நம்பிய ஆறுமுகமும், அங்கு ஆட்டுக் கொட்டகை போட்டுள்ளார். ஆடுகளை பாதுகாப்பதற்காக நம்பி மற்றும் குருசாமி ஆகியோரையும் ஆறுமுகம் வேலைக்கு அமர்த்தியிருந்தார்.
இந்நிலையில், ஜூன் 22 இரவு ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு, நம்பியும், குருசாமியும் தூங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் திடீரென ஆடுகளின் சத்தத்தைக் கேட்ட நம்பி கண்விழித்துப் பார்த்துள்ளார். அப்போது ஒரு நபர் ஆடுகளை திருடி செல்வது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நம்பி, அவரை தடுக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது, அந்த நபர் அருகில் இருந்த கம்பியை எடுத்து தாக்கியுள்ளார். இருந்தபோதிலும் விட்டுக்கொடுக்காத நம்பி, அந்த நபரை பிடித்து முகமூடியை திறந்து பார்த்தபோது, அது நிலத்தின் உரிமையாளர் கருப்பசாமி என்பது தெரியவந்துள்ளது. மேலும், “இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன்” என நம்பியை மிரட்டிய கருப்பசாமி ,அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால், கொலை மிரட்டலுக்கு அஞ்சாத நம்பி, பசுந்தனை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த பசுந்தனை பொலிஸார், கிளி (எ) கருப்பசாமியை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் மீது ஏற்கனவே திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. ஆட்டுக் கொட்டகை அமைக்க இடம் கொடுப்பது போல கொடுத்துவிட்டு, அதன் உரிமையாளரே ஆடுகளை திருட பார்த்தது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
8 minute ago
12 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
38 minute ago
3 hours ago