Editorial / 2023 ஜனவரி 08 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

அணிந்திருந்த ஆடைகளை களைந்து அந்த இளைஞரின் முன்பாக அரை நிர்வாணத்தில் நின்றமையால், அவ்விளைஞன் செய்வதறியாது திகைத்து நின்றான். உடனடியாகவே அவ்விரு பெண்களும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது…
திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி கிராமத்தில் சங்கரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு ஒன்று உள்ளது.
சம்பவத்தன்று வீடு பூட்டப்பட்டு கிடப்பதை நோட்டமிட்ட 2 பெண்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
2 பெண்கள் யாராவது வருகிறார்களா ? என்பதை நோட்டமிடுவதற்காக காவலுக்கு வெளியே நின்றிருந்தனர் . பக்கத்து நிலத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அங்கு வருவதை பார்த்து காவலுக்கு நின்ற பெண்கள், ஆள் வருவதாக சிக்னல் கொடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
சந்தேகத்துக்கிடமான வகையில் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த இரு பெண்களையும் மறித்த அவர், நீங்கள் யார் ? வீட்டுக்குள் எப்படி சென்றீர்கள் ? என்று விசாரித்துள்ளார்.
உடனடியாக அந்த இரு பெண்களும் தங்கள் அணிந்திருந்த சேலையை சரியவிட்டதோடு ஆடைகளை களைந்து அந்த இளைஞரின் முன்பாக அரை நிர்வாணத்தில் நின்று அவரின் கவனத்தை திசை திருப்ப முயன்றதாக கூறப்படுகின்றது.
அந்த இளைஞர் உறைந்து நின்ற நிலையில் , அங்கு வந்த வீட்டின் உரிமையாளர் உஷாரானதால், தங்கள் ஆடைகளை எடுத்துக் கொண்டு இரு பெண்களும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.சத்தம் கேட்டு அக்கப்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரட்டிச்சென்று 2 பெண்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் சேலத்தைச் சேர்ந்த பார்வதி மற்றும் சித்ரா என்பதும் தீரன் படத்தில் வருவது போல பகல் நேரத்தில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும், ஆள் நடமாட்டமில்லாததால் பகலிலேயே கைவரிசை காட்டியதாகவும் கூறப்படுகின்றது.
திருடச்செல்லும் இடங்களில் தங்களை ஆண்கள் யாராவது பிடித்தால், அவர்களது கவனத்தை திசை திருப்ப இந்த கேடி பெண்கள் தங்கள் ஆடைகளை களைந்து தப்பிப்பதை வாடிக்கையாக செய்து வந்தது பொலிஸார் விசாரணையில் தெரியவந்தது.
தப்பியோடிய மற்ற 2 பெண்களை பொலிஸார் தேடி வருகின்றனர். பொலிஸார் அந்த இரு பெண்களையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago