A.K.M. Ramzy / 2021 மார்ச் 15 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருவல்லிக்கேணி
மக்களிடம் பாராளுமன்றத் தேர்தலில் இருந்த எழுச்சி இப்போதும் இருப்பதாகச் சேப்பாக்கம்- திருவல்லிக் கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாகச் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுகிறார். முன்னதாக அவர் தமிழகம் முழுவதும் பிரசாரத்துக்குச் செல்ல உள்ளதால் போட்டியிட வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால் நேர்காணலில் உதயநிதி பங்கேற்ற நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தொகுதியில் உதயநிதி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.
முன்பு இருந்த அதே அளவு எழுச்சி இப்போதும் மக்களிடையே இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். உதய சூரியன் ஜெயிப்பதும் திமுக வெற்றி பெறுவதும்தான் எங்களின் முழக்கம். நீங்களே மக்களின் வரவேற்பைப் பார்த்திருப்பீர்கள்.
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் மக்கள் நன்றாக வரவேற்கிறார்கள். இது கருணாநிதி இரண்டு முறை வெற்றி பெற்ற தொகுதி. மாவட்டச் செயலாளர் அன்பழகன் வெற்றி பெற்ற தொகுதி.
மக்கள் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராக உள்ளார்கள். தொகுதிக்குள் முழுமையாக சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்பேன்.
எல்லா வேட்பாளர்களும் எல்லாத் தொகுதிகளிலும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.கண்டிப்பாகத் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்வேன்.
பிற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய நாளை கிளம்புகிறேன்'' என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago