Freelancer / 2023 ஜூலை 03 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணமாகியுள்ளது. இந்த இளம் பெண்ணின் கணவர் வெளியே சென்ற நிலையில் வீட்டில் அவர் தனியாக இருந்துள்ளார்.
இரவு சுமார் 10 மணியான நிலையில், வீட்டின் கதவை பெண் தாழிட மறந்து உள்ளே இருந்துள்ளார். அப்போது திடீரென உள்ள நுழைந்த 27 வயது வாலிபர் ஒருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் பதறிப்போன பெண் அந்த நபரை தடுக்க முயன்றுள்ளார். தடுக்க முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் அருகே இருந்த ஷேவிங் பிளேடால் அந்த நபரின் அந்தரங்க உறுப்பை அறுத்துள்ளார்.
அந்த நபர் காயமடைந்து துடித்து போகவே தப்பித்த பெண் அக்கம் பக்கத்தினரை அழைத்து கூக்குரல் எழுப்பினார். குரல் கேட்டு கிராமத்து மக்கள் ஓடுவதற்கு முன்பு அந்த நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago