2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஆண்களின் திருமணத்துக்கு தடையாக இருக்கும் வீதி

Freelancer   / 2023 செப்டெம்பர் 06 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலர் நல்ல வேலை கிடைக்காதா என பலரும் ஏங்கிக் கொண்டிருப்பது போல், பீகாரில் உள்ள ஒரு கிராமத்து இளைஞர்கள் நமக்கெல்லாம் திருமணமே ஆகாதா என விரக்தியில் இருக்கிறார்கள்.

பீகார் மாநிலத்தின் ஜாமூ மாவட்டத்திலுள்ள பரூத்தா கிராமத்தில் அக்கம்பக்கத்தில், உறவுக்கார முறையில் பெண்கள் இருந்தாலும், இந்தக் கிராமத்து இளைஞர்களுக்கு யாரும் அவ்வுளவு சீக்கிரத்தில் பெண் தர சம்மதிப்பதில்லை.  

 ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு எந்தவித வீதி வசதியும் இல்லாதது தான் இவர்களின் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

இவர்களது வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் பிரதான வீதி உள்ளது. அங்கு செல்வதற்கு தினமும் முழங்கால் அளவிற்கு சேறு நிறைந்த நீரில் இவர்கள் இறங்கி நடக்கிறார்கள். வீதி வசதிகள் எதுவுமே இல்லாத காரணத்தினால், இந்தக் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டேன் எனக் கூறுகிறார்களாம். இந்தக் காரணத்திற்காகவே பல இளைஞர்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X