Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 ஜனவரி 09 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் புகழ் பெற்ற ‘கரும்பாறை முத்தையா கோவில்‘ உள்ளது.
இக்கோவிலில் பல ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாவொன்று இடம்பெற்று வருகின்றது.
இத்திருவிழாவில் பலியிடப்படும் ஆடுகள் நேர்த்திக்கடனாக விடப்பட்டு, கோவிலிலேயே வளர்க்கப்படுகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இத் திருவிழாவில் 62 ஆடுகள் பலியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலியிடப்பட்ட ஆடுகளைவைத்து விருந்து தயார் செய்து அங்கு வரும் பக்தர்களுக்குப் பரிமாறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அசைவ விருந்தை உட்கொண்ட பின்னர் ஆண்கள் இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வதாகவும், இவ் இலைகள் காய்ந்து, அப்பகுதியில் இருந்து கலைந்த பின்னரே ,கோவிலுக்கு பெண்கள் வருகை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .