2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

ஆதரவில்லாத முதியவர்களை வீதியில் வீசியது மத்திய அரசு

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 31 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

   இந்தூர்;

மத்திய பிரதேசத்தில் வீடில்லாமல், ஆதரவில்லாமல் சுற்றித் திரிபவர்களை இந்தூர் நகராட்சி பணியாளர்கள் பிடித்து லொரியில் ஏற்றி அரசு காப்பகத்துக்கு அழைத்து சென்றனர்.  ஆனால், வழியில் அவர்களில் சிலரை வீதியில் இறக்கி விட்டுச் சென்றனர்.

கடும் குளிரில் ஆதரவற்ற நிலையில்வீதிகளில் அவர்களை இறக்கி விடுவதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  சிலர் அதனை படம் பிடித்தனர்.  இந்த வீடியோ வெளிவந்து வைரலானது.

இதற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் வெளியிட்டார்.  இந்த சம்பவத்தில், அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றும் பணியாளர் களை தண்டிக்காமல் அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டார்.

இந்த சம்பவத்துக்கு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்துள்ள துடன், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இதனையடுத்து நகராட்சி துணை ஆணையாளர் இடைநிறுத்தம்  செய்யப்பட்டார்.  அதேவேளையில், முதியவர்கள் அரசு இல்லங்களுக்கு திரும்பி விட்டனர் என பா.ஜ.க. எம்.பி. சங்கர் லால்வானி கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .