Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருப்பவையை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதே ஆன்மீக ஆட்சி. அத்தகைய ஆன்மீக ஆட்சியை அமைக்கவே பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) போரடிக் கொண்டிருக்கிறது என்று தமிழக பா.ஜ.க.இ தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
திருவாசகம் முற்றோதல் புகழ் சிவனடியார் சிவதாமோதரனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நமது குருமார்கள், தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி வரவேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆன்மீக ஆட்சி என்பது கோவிலில் நித்தியப்பூஜை செய்வது கிடையாது. அது ஆன்மீக ஆட்சியில் ஒரு பங்கு அவ்வளவுதான் என்றார்.
ஆன்மீக ஆட்சி என்பது மக்களுக்கான சிந்தனை, சமுதாயத்தின் மீது ஒரு எண்ணம், ஜாதி, மதத்தையெல்லாம் தாண்டி மனிதனை, மனிதனாக பார்ப்பது. இருப்பவன் தன்னிடமிருப்பதை சுவிஸ் வங்கியிலோ, வங்கி கணக்கிலோ பூட்டி வைப்பதற்கு கிடையாது. தனக்கு எவ்வளவு தேவையோ, அதற்குப் பின்னர் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது அதைவிட மிக முக்கியமானது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .