A.K.M. Ramzy / 2021 ஜனவரி 31 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை
ஆள்பிடித்தாலும், வேல் பிடித்தாலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று நேற்று மதுரையில் நடந்த எம்ஜிஆர்-ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:
"தீய சக்திகளின் சவால்களை முறியயடித்து ஜெயலலிதாவின் நினைவு கோவில் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு திருக்கோயில் கட்டி திறக்கப்பட்டது.
கேட்டதை கேட்டால் கொடுக்கக்கூடிய தெய்வங்கள் பல உண்டு. ஆனால், கேட்காமலே கொடுத்த தெய்வங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. அவர்களுக்காக கோவிலே அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கட்டியுள்ளார் என்று நினைக்கிறபோது அதிமுகவுக்கு பெருமையாக உள்ளது.
தெய்வ சக்தியையும், மக்கள் சக்தியையும் நம்பும் இயக்கம் அதிமுக. ஆனால், சிலர் தெய்வங்களை இழிவுப்படுத்துவார்கள். தேர்தல் நேரத்தில் கொண்டாடுவது போல் நடிப்பார்கள். மக்களும், அந்த தெய்வங்களும் அவர்களை பார்த்தக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆட்சியைபிடிக்க வடக்கே இருந்து ஆட்களை பிடித்து வந்தார்கள். இப்போது வேல் பிடிக்கிறார்கள். ஆள் பிடித்தாலும், வேல் பிடித்தாலும் தமிழகத்தில் அவர்கள் ஆட்சியை மட்டும் பிடிக்க முடியாது. அதிமுக ஆட்சிக்கு எத்தனை இடையூறு வந்தாலும் அதனை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் தடுத்து நிறுத்துவான் என்றார் பன்னீர்.
22 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
8 hours ago
9 hours ago