A.K.M. Ramzy / 2021 ஜூன் 15 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆக்ரா
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்றரை வயது சிறுவன், எட்டு மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டான்.
ஆக்ரா அருகேயுள்ள தரியாய் கிராமத்தில் சோட்டேலால் என்பவர் மகன் நேற்றுக் காலை, வீட்டு வாசலில் விளையாடினான். அருகில் இருந்த 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.உடனடியாக இராணுவம், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களுக்கு அறிவித்தவுடன் விரைந்து வந்து மீட்புப் பணியைத் ஆரம்பித்தனர்.
எட்டு மணி நேர போராட்டத்துக்குப் பின், மாலையில் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். சிறுவனின் தந்தை சோட்டேலால் கூறுகையில், ''நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி. என் குழந்தையை
மீண்டும் உயிருடன் பார்த்து விட்டேன். குழந்தையை மீட்டுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
18 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago