A.K.M. Ramzy / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைகளை மக்கள் கேட்கும் வண்ணம் இனிய இசை வழியில் தந்தவர் இனியவன். இவர் நேற்று மாரடைப்பினால் காலமானார்.
அவரது மரணம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: 'இசை அமைப்பாளர் இனியவன் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மிகச்சிறந்த இசை அமைப்பாளர். தஞ்சை மாவட்டத்துக்காரர். தேர்ந்த இயக்குனர்களிடம் இவர் கைகோர்த்திருந்தால் திரை இசையைக் கலக்கியிருப்பார்.
‘கௌரி மனோகரி’ படத்தில் கே.ஜே.ஜேசுதாசும் - எஸ்.பி.பியும் இணைந்து பாடிய “அருவி கூட ஜதியில்லாமல் சுரங்கள் பாடுது'பாடல் கேட்டால் இவர் ஆற்றல் புரியும். எனது ‘ஜென்மம் நிறைந்தது’ பாடலுக்கும் இசை இவரே.
ஐந்து நாட்களுக்கு முன்பு கூட பேசினோம். நல்ல உடல் நலனோடு இருந்தார். ‘ஓடங்கள்’ பட இசை அமைப்பாளர் சம்பத் செல்வத்திடம் இசை உதவியாளராக இருந்து அவர் மூலம் தனக்கு அறிமுகம் ஆனவர். நீண்ட கால நண்பர். இவரது உடல் சொந்த ஊரான தஞ்சைப் பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
19 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago
1 hours ago