Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 மே 22 , பி.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபோது எங்களது கண்ணீர் ஆறாய் ஓடியது. ஆனால், அந்த கொலையாளிகளின் விடுதலையை தற்போது, திருவிழாவாகக் கொண்டாடும்போது எங்கள் இதயத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே, கே.எஸ்.அழகிரி, மேற்கண்டவாறு தெரிவித்தார். “குற்றவாளியை கடவுளாக கருத முடியாது. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்றும் கூறினார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago