Freelancer / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா-சீனா இடையே கடந்த 3 ஆண்டுகளாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் போர் பதட்டம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இருநாட்டு இராணுவ தரப்பிலும், தூதரக ரீதியாகவும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் உடன்பாடு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளில் இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டு விட்டன. இன்னும் சில பகுதிகளில் இருந்து படைகள் வெளியேற வேண்டியது உள்ளது
கடைசியாக 18-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் 23-ந் திகதி கிழக்கு லடாக்கில் சுசுல் மோல்டோ சந்திப்பில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக சுமார் 4 மாதங்களுக்கு பிறகு 19-வது சுற்று அமைதி பேச்சுவார்த்தை 14-ந் திகதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
50 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago