2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இந்திய இராணுவத்துக்கு நான்காம் இடம்

Freelancer   / 2023 ஜூலை 13 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாடுகளில் பெரும்பாலானவை இராணுவப் படையைக் கொண்டுள்ளன. எல்லைப் பாதுகாப்பு, போர், அவசர மற்றும் பேரிடர் காலங்களில் உதவி என்று வலிமையான இராணுவ படையை உருவாக்குவதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேகமான தகுதி, கடுமையான பயிற்சி என்று பல நடைமுறைகள் உள்ளன.

தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொரு நாட்டின் இராணுவப் படையுமே உரிய பயிற்சிகளுடன் வலிமையாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சில நாடுகளின் இராணுவம் அதிகம் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. சமீபத்தில், மிரர் நவ் வெளியிட்ட செய்தியின்படி உலகிலேயே மிகவும் வலிமையான இராணுவப் படையை கொண்ட நாடு அமெரிக்கா என்று கூறப்பட்டுள்ளது.  

குளோபல் ஃபையர்பவர் இந்த ஆண்டுக்கான வலிமையான இராணுவப் படையை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 145 நாடுகளில் உள்ள இராணுவப் படைகளின் பலம் பலவீனங்களை ஆய்வு செய்து, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த வரிசைப் பட்டியல், கிட்டத்தட்ட 60 காரணிகளில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் அதிக சக்தி வாய்ந்த இராணுவ படை கொண்ட நாடாக அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய இராணுவம், இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

வலிமையான இராணுவம் கொண்ட நாடுகளில், அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும் உள்ளன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X