2025 மே 12, திங்கட்கிழமை

இந்திய போர் கப்பல்கள் திடீர் பயிற்சி

Freelancer   / 2025 மே 04 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் உருவானபோது அரபிக் கடலில் அக்ரான் என்ற பெயரில் போர் பயிற்சிகள் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் திடீர் பயிற்சியில் ஈடுபட தொடங்கி உள்ளன. 

 அரபிக் கடலின் பல்வேறு பகுதிகளில், சனிக்கிழமை (3) இந்திய போர் கப்பல்கள் அணிவகுத்து போர் பயிற்சியை தொடங்கின.

இந்த போர் பயிற்சி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து கடற்படை தளபதி, சனிக்கிழமை (3) நீண்ட விளக்கம் அளித்துள்ளார். எனவே தற்போது அரபிக் கடலில் நடந்து வரும் இந்திய போர் கப்பல்களின் போர் ஒத்திகை பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வருகிற 7ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு தொடர்ந்து இந்த போர் ஒத்திகை பயிற்சி நடைபெறும் என்று இந்திய கடற்படை அறிவித்துள்ளது. போர் ஒத்திகை எப்படி நடக்கிறது என்கிற தகவல் கள் வெளியிடப்படவில்லை.

என்றாலும் இந்திய கடற்படை கப்பல்கள் நீண்டதூர தாக்குதலுக்கு தங்களை தயார்ப்படுத்தும் வகையில் பயிற்சி நடப்பதாக தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட இலக்குகளை மிக மிக துல்லியமாக தாக்கும் பயிற்சிகளும் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இந்திய கடற்படை போன்று வட மண்டலத்தில் இந்திய விமானப்படையும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதட்டம் தொடர்ந்து நீடித்தப்படி உள்ளது.

எனவே இந்தியா தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் கூறியபடி உள்ளது. கடந்த 2 தினங்களாக பாகிஸ்தான் ராணு வத்தினர் அதிகளவு ராடார் கருவிகளை எல்லைப் பகுதிகளுக்கு கொண்டு வந்து குவித்துள்ளனர்.

குறிப்பாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா ஊடுருவும் என்று எதிர்பார்த்து பல இடங்க ளில் பாகிஸ்தான் போர் விமானங்களை நிறுத்தி இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X