2026 பெப்ரவரி 09, திங்கட்கிழமை

ஆண் வேடமணிந்த “களுபாலம் டிலு” கைது

Freelancer   / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஆவார். சந்தேக நபரான பெண்ணிடமிருந்து சுமார் 150 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட பெண், தனது தலை முடியை வெட்டிக்கொண்டு ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .