2025 மே 14, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் 14 பேருக்கும் விளக்கமறியல்

Editorial   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

இலங்கை - நெடுந்தீவு கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், ஞாயிற்றுக்கிழமை (29) காலை  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 14 இந்திய மீனவர்களே இவ்வாறு யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் நீரியல்வள திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 08ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X