Freelancer / 2022 நவம்பர் 14 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
17ஆவது ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவின் பாலிக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் நவம்பர் 14 முதல் 16 வரை பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலி உச்சிமாநாட்டின் போது, "ஒன்றாக மீட்போம், வலுவாக மீட்போம்" என்ற உச்சிமாநாட்டின் கருப்பொருளின் கீழ், ஜி20 தலைவர்கள் உலகளாவிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளனர்.
ஜி20 உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பு; சுகாதாரம்; மற்றும் டிஜிட்டல் மாற்றம் என்று மூன்று அமர்வுகள் நடைபெறும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சிமாநாட்டின் நிறைவுக் கூட்டத்தில், ஜி20 தலைவர் பதவியை பிரதமர் மோடியிடம் ஜனாதிபதி விடோடோ ஒப்படைக்கவுள்ளார். ஜி20 தலைவர் பதவியை இந்தியா டிசெம்பர் 1ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஏற்கவுள்ளது.
உச்சி மாநாட்டையொட்டில், பிரதமர் மோடி தனது சகாக்கள் சிலருடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளதுடன், பாலியில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் உரையாற்றவுள்ளார்.
கடந்த வார தொடக்கத்தில், வீடியோ தொழிநுட்பம் மூலம் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ இலட்சனை , கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் வெளியிட்டார்.
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உலக அரங்கில் தலைமைப் பாத்திரங்களை மேற்கொள்ளும் வகையில் உருவாகி வருகிறது.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் பங்களிக்க இந்தியாவிற்கு ஜி20 தலைமைத்துவம் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ இலட்சனை , கருப்பொருள் மற்றும் இணையதளம் ஆகியவை உலகுக்கு இந்தியாவின் செய்தி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரிமைகளை பிரதிபலிக்கின்றன.
ஜி20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதம் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகியவற்றைக் குறிக்கும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும்.
ஜி20 தலைமைத்துவத்தின் போது, இந்தியா முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தவுள்ளதுடன், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாடு, இந்தியா நடத்தும் மிக உயர்ந்த சர்வதேசக் கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
14 minute ago
52 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
52 minute ago
7 hours ago