2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இரத்தம் ஏற்றிய 14 சிறார்களுக்கு எச்ஐவி

Freelancer   / 2023 ஒக்டோபர் 25 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள லாலா லஜபதிராய் அரசு மருத்துவமனையில், வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே, 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 சிறார்களுக்கு தானம் பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ரத்தம் ஏற்றப்பட்ட 14 சிறார்களுக்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் 2 பேருக்கு எச்.ஐ.வி, 7 பேருக்கு ஹெபடைடிஸ் பி, 5 பேருக்கு ஹெபடைடிஸ் சி இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில் சிறார்கள் அனைவரும் கான்பூர், பரூகாபாத், இட்டாவா மற்றும் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும்,இரத்தத்தைப் பரிசோதிக்காமல் சிறார்களுக்கு செலுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது இதுகுறித்து​ பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X