2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

இரத்த மாற்றுச் சிகிச்சை 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் இரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் சைபாசா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா பாதித்த 5 குழந்தைகளுக்கும் இரத்தம் மாற்று சிகிச்சைகாக மருத்துவமனையின் இரத்த வங்கியிலிருந்து இரத்தம் ஏற்றப்பட்டது .

இந்நிலையில் அதில் ஒரு குழந்தையின் பெற்றோர், இரத்த வங்கியில் தங்கள் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தம் செலுத்தப்பட்டதால் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டினர். 

தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு உறுதியானது.

தலசீமியா பாதித்த குழந்தைகளுக்கு மோசமான இரத்தம் செலுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் விசாரணையின் போது இரத்த வங்கியில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன என்றும் டாக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இரத்த வங்கியின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .