2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

இரு நாள்கள் தனியாக மனம் விட்டு பேசுங்கள்

Freelancer   / 2022 ஜூலை 11 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அது ஒரு கட்டத்தில் மோசமடைய இருவரும் ஒரு வருடத்துக்குள்ளே பிரிந்துள்ளனர். சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து மனைவியின் முறைப்பாடு காரணமாக இது வழக்கு, விவகாரத்து என்பது வரை தற்போது நீண்டுள்ளது. 

பெண்ணின் கணவர் நகையை வைத்துக்கொண்டு தர மாட்டேன் எனக் கூறியதாக, கணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடுத்துள்ளார் மனைவி. இந்நிலையில், கணவர் பிணைக் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அத்துடன் இருவரும் விவாகரத்து செய்யும் முடிவெடுத்துள்ளனர். இந்த வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கௌசிக் சந்தா விசாரித்துள்ளார். பின்னர் தம்பதி இருவரையும் தனது சேம்பருக்கு அழைத்த நீதிபதி சந்தா, இருவரும் படித்து நல்ல நிலையில் உள்ளீர்கள். இப்படி இருந்து சிறு சிறு விவகாரங்களுக்காக இவ்வாறு முடிவெடுப்பது உகந்தது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இருவரும் நல்ல சூழலில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் என அறிவுரை வழங்கி இரு நாள்களுக்குப் பின் வரச் சொல்லியுள்ளார். இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள இக்கோ பார்க் என்ற இடத்தில் இருவரும் தங்கி பேசவுள்ளனர். வழக்கை நீதிபதி சந்தா கையாண்ட விதம் தனி கவனத்தை பெற்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .