Ilango Bharathy / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தான் மாநிலம் கரெளலி நகரில் பாரம்பரிய புத்தாண்டு பேரணியின்போது இரு பிரிவினரிடையே நேற்றைய தினம் (02) ஏற்பட்ட மோதலால், அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிஸார் கருத்துத் தெரிவிக்கையில் , ‘‘ஹிந்துப் புத்தாண்டின் முதல் நாளையொட்டி கரெளலியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒரு பிரிவினா் இரு சக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனா்.

இதன் போது அவா்கள் மீது மர்ம நபர்கள் சிலா் கற்களை வீசியதால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சில இருசக்கர வாகனங்கள், கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டதோடு, கல்வீச்சில் 25க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். அவா்களில் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனா்.
இச் சம்பவத்தால் கரெளலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 600க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்’’ என்று தெரிவித்தனா்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago