Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளா
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சஜ்ஜத் டங்கல் தன் 25வது வயதில் கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நடிகை ராணி சந்திரா குழுவுடன் 1976 ஆம் ஆண்டு அபுதாபி சென்றிருந்தார்.
அங்கிருந்து குழுவினர் வந்த விமானம் மும்பையில் விபத்தில் சிக்கியதில் நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் இறந்தனர். ஏதோ காரணங்களால் அந்த விமானத்தில் சஜ்ஜத் டங்கல் பயணிக்கவில்லை.
தன்னுடன் வந்த குழுவினர் பலியானதால் அதிர்ச்சி அடைந்த அவர் மனதளவில் பாதிக்கப்பட்டார். பின் மும்பை வந்து சிறு வேலைகளை செய்து வாழ்ந்துள்ளார்.
விமான விபத்துக்கு பின் சஜ்ஜத் வீடு திரும்பாததால் அவரும் இறந்துவிட்டதாகவே குடும்பத்தினர் கருதி சகல கடமைகளையும் செய்துள்ளனர்.
சஜ்ஜத்தின் உண்மை நிலையை சமீபத்தில் அறிந்த ஒரு தொண்டு நிறுவனம் அவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தது.அவரது 91 வயது தாய் பாத்திமா பீவி இறந்ததாக கருதப்பட்ட தன் மகன் 45 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்தபோது கண்ணீர் மல்க வரவேற்றார்.
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை ஆரத்தழுவினர். அவரது கிராமமே உற்சாகத்தில் மிதந்தது.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago