Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 30 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடகா மாநிலம் மங்களூரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மணமக்களுக்கு நடந்த வினோத திருமணம் குறித்து சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
இந்த திருமணத்திற்கு பிரேத திருமணம் என்பார்கள். கர்நாடகா மாநில தட்சினா கன்னடா மாவட்டத்தில் தான் இந்த பெயரில் இறந்தவர்களுக்கு திருமண நிகழ்வு நடந்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில சமுதாயத்தை சேர்ந்த மக்கள் இந்த பிரேத திருமணத்தை ஒரு சடங்காக பார்த்து அதை பின்பற்றி வருகிறார்கள்.
அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன இரு குழந்தைகளுக்குத்தான் இந்த பிரேத திருமணம் நடைபெற்றது. சிறிய வயதிலோ அல்லது இளமை காலத்திலோ அல்லது திருமணம் செய்யாமல் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இது போன்ற ஒரு சம்பிரதாயம் மிகவும் தீவிரமாக நடத்தப்படுகிறது.
திருமணம் செய்யாமல் யாருடைய வாழ்க்கையும் முழுமை அடையாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால்தான் பல வீடுகளில் மகனோ மகளோ எத்தனை அழிச்சாட்டியம் செய்தாலும் அந்த தாய் தந்தைக்கு ஒரு திருமணம் செய்து பார்க்க ஆசைப்படுவார்கள். இந்த திருமணங்கள் கடைசி வரை எந்த பிரச்சினையும் இன்றி நிலைத்து நிற்பதும் உண்டு, பிரச்சினையாகி நீதிமன்ற வாயில்களுக்கு செல்வதும் உண்டு.
ஆனால் ஆத்மா எனும் போது யாரையாவது காதலித்துவிட்டு இறந்திருக்கலாம், திருமண வயதில் இறந்திருக்கலாம், தனக்கு இப்படித்தான் திருமணம் ஆக வேண்டும் என்ற கனவுடன் இறந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்களின் ஆத்மா அதன் லட்சியம் நிறைவேறாவிட்டால் ஆவியாக அலைந்து கொண்டிருக்கும் என்பது நிரூபிக்கப்படாத ஒரு பேசுபொருளாகும்.
எனவே இது போன்ற ஆத்மாக்களுக்கு திருமணம் செய்து வைத்து மோட்சம் அடைய இந்த சடங்கை பின்பற்றி வருவதுதான் இந்த பிரேத திருமணம் ஆகும். நிஜ திருமணம் எப்படி நடைபெறுகிறதோ அப்படியேதான் இந்த பிரேத திருமணங்களும் நடைபெறும். இரு இருக்கைகள் போடப்பட்டு அதில் மணமகன்,மணமகளின் துணிமணிகளை வைத்து சில திருமண சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்த திருமணத்தில் போடப்பட்ட இருக்கைகளில் மணமகளும் மணமகனும் (அவர்களது ஆடைகளுடன் உறவினர்கள்) 7 முறை சுற்றி வருவது வழக்கம்.
மேலும், திருமணம் என்றாலே விருந்துதானே. மீன் வறுவல், சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி, இட்லி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன. திருமண சடங்குகள் மீது நம்பிக்கை வைத்திருப்போர் இந்த வீடியோக்களை பார்த்து புல்லரித்து போயுள்ளனர். கலாச்சாரம், பண்பாடு மீது நம்பிக்கையில்லாத சிலர் இதெல்லாம் முட்டாள்தனம் என்கிறார்கள். இன்னும் சிலர் இந்த பிரேத திருமணங்கள் கொரியா அல்லது சீன நாட்டின் கலாசாரமாக இருக்கலாம் என்கிறார்கள்.
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago