2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்

Freelancer   / 2022 ஜூலை 22 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில்  வாகன சோதனையில் நேற்று (21) ஈடுபட்டிருந்த வனத்துறை அதிகாரிகள் ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். 

சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் சங்கு மூடைகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சாக்கு பைகளில் இருந்த சுமார் 30 கிலோ கிராம் கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து தொண்டியை சேர்ந்த 2 பேரை  கைதுசெய்து விசாரணை நடத்தி வருவதுடன் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டையின் சர்வதேச மதிப்பு சுமார் 4  இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்றும் ராமேசுவரத்தில் உள்ள வியாபாரி ஒருவரிடம் கொடுத்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது. 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X