Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 13 , பி.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோழ மன்னர்கள் ஆட்சி செய்ததாக கூறப்படும் இலங்கையில் உள்ள பழமையான கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையை 78 ஆண்டுகளுக்கும் மேலாக சோழ மன்னர்கள் ஆண்டதாக கூறப்படும் நிலையில், பொன் மாணிக்கவேல் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் இலங்கையில் இருக்கும் எடகடே கிராமத்தில் 1009 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழன் கட்டிய உத்தம சோளீஸ்வரன் உடைய மகாதேவர் கோயில் இருப்பதாகவும் அந்த கோயிலை 1912-ம் ஆண்டு ஐரோப்பிய கிறிஸ்தவ கல்வெட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
வரலாற்று பொக்கிஷமாக இருக்கும் இந்த கோயிலில் மிகப்பெரிய கருங்கல் தூண் உள்ளதாகவும், அதில் இருக்கும் தமிழின் பழமையான வட்டெழுத்துகள் ராஜராஜ சோழனின் 78 ஆண்டுகால ஆட்சியை குறிப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
21 ஏக்கர் நிலம் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்டு அதின் வருமானத்தைக் கொண்டு கோயிலை பராமரிக்க வேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதாகவும் பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சோழ மன்னர்கள் ஆட்சி செய்ததை குறிக்கும் பழமையான கருங்கல் தூண் பற்றிய தகவல் இந்திய தொல்லியல் துறைக்கு தெரியவில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறையும் மத்திய கலாசாரத்துறையும் இலங்கை அரசுயுடன் கலந்து பேசி ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலில் ஆய்வு நடத்த வேண்டும் என்றும் பொன் மாணிக்கவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.
8 minute ago
17 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
2 hours ago
2 hours ago