2026 மார்ச் 05, வியாழக்கிழமை

இளைஞரின் உயிரைப் பறித்த பிரயாணி

Ilango Bharathy   / 2022 நவம்பர் 30 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நண்பர்களுடன் பிரியாணி உட்கொண்ட இளைஞனர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். 24 வயதான அவர் அண்மையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது அறையில் வைத்து பிரியாணி  உட்கொண்டுள்ளார்.

இதன் போது அவருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளது. அத்துடன் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக அம்புலன்ஸ் சேவையை வரவழைத்த அவரது நண்பர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்தவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரியாணி உட்கொண்டதுமே அருண் வாந்தி எடுத்ததால், உணவு நஞ்சடைந்திருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .