Ilango Bharathy / 2023 ஏப்ரல் 20 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகேஷ் ஜோஷி என்ற அமைச்சர் மீது ராஜஸ்தானில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் சுபாஷ் சவுக் பகுதியை சேர்ந்தவர் ராம்பிரசாத். 38 வயதான இவர் அங்குள்ள ஒரு களஞ்சிய சாலையொன்றில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
அவர் இறப்பதற்கு முன்பாக பதிவு செய்த வீடியோவில் அமைச்சர் மகேஷ் ஜோஷி, ஹோட்டல் உரிமையாளர் முஞ்ச் தங்க் உள்ளிட்டோர் தனது குடும்பத்துக்கு ஏராளமான தொல்லை கொடுத்ததால், தாம் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து ராம்பிரசாத்தின் சகோதரர், சுபாஷ் சவுக் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில், ராம்பிரசாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் மகேஷ் ஜோஷி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
49 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
01 May 2026