Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 27 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர்களை ஆபாச படத்தில் நடிக்க வைத்த குற்றச்சாட்டில் பிரபல பெண் இயக்குனரான `லட்சுமி தீப்தாவை` கேரளப் பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.
லட்சுமி தீப்தா, மலையாளத்தில் ‘நான்ஸி, ஸெலின்றெ டியூசன் கிளாஸ், பால் பாயாசம் ‘ போன்ற வயது வந்தவர்களுக்கான (18+) இணையத்தொடர்களை இயக்கியுள்ளார்.
இவை அனைத்திலுமே அதிகளவில் அந்தரங்கம், படுக்கையறைக் காட்சிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லக்ஷ்மி தீப்தா இப்படங்களில் அனைவரையும் ஏமாற்றி நடிக்க வைத்ததாகவும் தொடரில் அக்கா, தம்பி, மாமா, பாட்டி என நடித்தவர்கள், சாதாரண இணையத் தொடர் என்பதால் அதில் நடித்ததாகவும், ஆனால் படம் வெளியான பிறகுதான் அது வயது வந்தவர்களுக்காக இணையத் தொடர் எனத் தெரிய வந்ததாகவும் கூறியுள்ளனர்.
ஏற்கனவே ” தன்னைக் கட்டாயப் படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்தார்” என லக்ஷ்மி தீப்தா மீது யுவதி ஒருவர் புகார் அளித்திருந்தார்.
குறித்த புகாரில் ”ஆபாசமான படம் என்ற போர்வையில் விபச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் வெங்கனூரை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரும் ”, லக்ஷ்மி தீப்தா தன்னை படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி ஆபாசப் படத்தில் நடிக்க வைத்துள்ளார் எனப் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து லக்ஷ்மி தீப்தாவைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
9 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jul 2025