Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 13 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கத்தாவில் மனைவி வேலைக்கு போக கூடாது என்று கையை துண்டாக வெட்டிய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் புர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேணு கட்டுன். இவருக்கு நர்ஸ் பணி மீது அதிக ஆர்வம் இருந்து வந்ததால், நர்சிங் பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். ரேணுவின் கணவர் பெயர் முகமது. திருமணமாகி சில ஆண்டுகள்தான் ஆகியுள்ளது.
முகமது வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வரும் நிலையில், ரேணு நர்சிங் படித்துக்கொண்டே வேறொரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். வேலை இன்றி வீட்டில் இருக்கும் முகமதுவுக்கு இது பிடிக்கவில்லை.
மனைவி வேலைக்கு சென்று சம்பாதிப்பதால் குடும்பம் ஓடுகிறது என்று எண்ணாமல் நம்மை மீறி மனைவி சென்று விடுவாளோ என்ற பயம் முகமதுவை தொற்றிக்கொண்டது.
இந்த சூழலில் தான் ரேணுவுக்கு அரசு மருத்துவமனையில் செவிலியராக அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வந்தது. ஆனால், அந்த வேலைக்கு செல்லக்கூடாது என முகமது கண்டிப்பான கண்டிஷனை போட்டுவிட்டார்.
கனவு வேலை அதுவும் அரசாங்க வேலை என்ற மகிழ்ச்சியில் இருந்த ரேணுவுக்கு கணவனின் கண்டிஷன் பேரிடியை கொடுத்தது.
மேலும், தனது வார்த்தையை மீறி மனைவி வேலைக்கு சென்று விடுவாளோ என்ற எண்ணத்தில் சம்பவத்தன்று முகமது ரேணுவின் கை மணிக்கட்டை துண்டாக வெட்டியுள்ளார்.
இதனால் சரிந்து விழுந்த மனைவியை உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துவிட்டு முகமது தலைமறைவாகியுள்ளார்.
தகவல் அறிந்து வந்த பொலிஸார் முகமதுவின் வீட்டுக்கு சென்றனர். அங்கு முகமதுவும், அவரது உறவினர்களும் கூட தலைமறைவாகியிருப்பது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து, வீட்டை சோதனை செய்தபோது ரேணுவின் கையின் துண்டான பாகம் கிடைத்ததையடுத்து, தாமதமானதால் அதை மீண்டும் ஒட்ட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .