2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உண்டியலில் 100 கோடி கணக்கில் 17 ரூபாய்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே சிம்மாசலம் அப்பாண்ணா வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது.    இந்த கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும்.  

உண்டியல் காணிக்கை எண்ணும் போது  வங்கியின் காசோலை ஒன்று உண்டியலில் கிடந்துள்ளது. இதை எடுத்து பிரித்து பார்த்ததில்  100 கோடி ரூபாய் கோயில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கோவில் ஊழியர்கள் அந்தக் கோவிலின் செயல் அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அவர் அந்த காசோலையை எடுத்துக் கொண்டு  வங்கி கிளைக்குச் சென்றுள்ளனர்.

வங்கியில் காசோலையை கொடுத்து சோதனை செய்த போது அந்த காசோலைக்கு சொந்தமான வாடிக்கையாளரின் கணக்கில் வெறும்  17 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. வராக லட்சுமி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்டிருந்த அந்த காசோலையில் முதலில் 10 ரூபாய் என்று எழுதிவிட்டு, பிறகு அதை அழித்து 100 கோடி ரூபாய் என்று எழுதப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X