Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Freelancer / 2024 மார்ச் 13 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிராவில், கொள்ளையர்கள் தன்னை துப்பாக்கியால் சுட்டும் அதனை பொருட்படுத்தாமல் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனத்தை செலுத்தி வந்து பயணிகளின் உயிரை காப்பாற்றினார் சாரதி ஒருவர். இவருக்கு மக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கோம்தேவ் கவாடே. சாரதியாக பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினமும் வழக்கம்போல் பணிக்கு சென்றிருந்தார். அப்போது சுமார் 35க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நாக்பூரை நோக்கி மகாராஷ்டிராவின் அமரவதி - நாக்பூர் நெடுஞ்சாலையில் டெம்போ டிராவலர் வேனை ஓட்டிச் சென்றுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்தபோது, தீடீரென கார் ஒன்று அவர்களை வேகமாக பின் தொடர்ந்துள்ளது. அந்த வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கி உடனடியாக வேனை நிறுத்துமாறு வழிமறித்துள்ளனர்.
இவர்கள், கொள்ளையர்கள்தான் என்பதை உணர்ந்து கொண்ட சாரதி வேனை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனால், கோபமடைந்த கொள்ளையர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால், காயமடைந்த அவர் காயத்தைப் பொருட்படுத்தாமல் பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வாகனத்தை நிறுத்தாமல் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டியுள்ளார் கவாடே. பின்னர், அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பயணிகளை பாதுகாப்பாக இறக்கிய கவாடே கொள்ளையர்கள் குறித்து பொலிஸிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சாரதியுடன் சேர்த்து மொத்தம் 4 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
7 hours ago