2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

உலகிலேயே மிகச்சிறிய ஸ்பூன் உருவாக்கி சாதனை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலர் தங்களது அசாத்திய செயல்களால் தங்களுக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதோடு, உலக சாதனைகளையும் படைக்கின்றனர்.   அந்தவகையில், பேனாவின் நுனியை விட மிகச்சிறிய மரக்கரண்டியை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார் பீகாரை சேர்ந்த சஷிகாந்த் பிரஜாபதி என்ற வாலிபர்.

கைவினை பொருட்கள் தயாரிப்பதில் கைதேர்ந்தவரான இவர் 1.6 மில்லி மீட்டர் அளவில் உலகிலேயே மிகச்சிறிய ஸ்பூனை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை செய்ய பல முறை முயற்சி செய்த சஷிகாந்த் 10 முறை தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் தனது விடாமுயற்சியால் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து அதில் வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளார்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X