A.K.M. Ramzy / 2021 ஜனவரி 28 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.
உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் இன்று ஜனவரி 28ஆம் திகதி காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். உலகெங்கிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில்துறை தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
நான்காவது தொழில் புரட்சி- மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் என்பது குறித்து பிரதமர் உரையாற்றவுள்ளார். பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளோடும் அவர் உரையாடுவார்.
கொரோனாவுக்குப் பிந்தைய உலகத்துக்கான உலக பொருளாதார மன்றத்தின் மாபெரும் புத்தாக்க நடவடிக்கையின் தொடக்கத்தை டாவோஸ் மாநாடு குறிக்கிறது.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026