Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரியில் 23 வயதான பெண்ணொருவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதன்போது அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த `அமீன்` என்பவருடன்
அப்பெண் நட்பாகப் பழகி வந்துள்ளார்.
நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறிய நிலையில், அமீன் அப்பெண்ணிடம் ”இருவரும் திருமணம் செய்து கொள்வோம்” என ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணுடன் உள்ளாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ”தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி” அமீனை அப் பெண் வற்புறுத்தி வந்துள்ள நிலையில், அவர் திருமணத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அமீனைக் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வெளியானது.
அதில் அமீனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கபட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடா 4 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
9 minute ago
44 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
46 minute ago