A.K.M. Ramzy / 2021 ஜனவரி 04 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யவும் இல்லை. ஒப்பந்த முறை விவசாயமும் செய்யவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 40 நாள்களாக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், இந்தச் சட்டங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும். விளைநிலங்கள் கார்ப்பரேட் கரங்களில் ஒருநாள் சொந்தமாகும் என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களை விவசாயிகள் சேதப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பொலிஸாரும் விவசாயிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். விவசாயிகள் தொலைத்தொடர்பு கோபுரங்களைச் சேதப்படுத்தக் கூடாது என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்தச் சூழலில் பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
''மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எங்கள் நிறுவனம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யவில்லை. விவசாயிகளுடன் ஒப்பந்த முறை விவசாயமும் செய்யவில்லை.
நாட்டில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ள வேளாண் சட்டங்களால் எங்கள் நிறுவனத்துக்கு எந்தவிதமான ஆதாயமும் இல்லை. அதனால் பலனும் இல்லை.
ஆனால், வேளாண் சட்டங்களுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைத்து, எங்கள் நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் தீய நோக்கத்துடன் பரப்பி, எங்கள் நிறுவனத்தின் விற்பனையையும், மரியாதையையும் சிலர் கெடுக்கிறார்கள் என்றார்.
17 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
36 minute ago
52 minute ago